பாண்டவர்கள் வழிபட்ட ஸ்ரீஉகந்தீஸ்வரர் கோவில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
23:56

திருப்பூர்:பஞ்சபாண்டவர் வழிபட்டு பரமனது அருள் பெற்ற தலமாக விளங்கிய, பெரும்பண்ணை சவுந்திரவல்லி உடனமர் உகந்தீஸ்வரர் கோவிலை, திருப்பணி செய்து மீண்டும் பொலிவுற அமைக்க வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கொங்கு நாட்டின், 24 உட்பிரிவு நாடுகளில் ஒன்றாக விளங்கும் பொன்குலுக்கி நாட்டில், பெரும்பண்ணையில் சிவபெருமானும், பெருமாளும் அருகருகே கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தற்போது, கோவில் வழி எனப்படும் அப்பகுதியில், ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சிவாலயம், இன்று பரிதாபத்குரியதாக சிதிலமடைந்து காணப்படுகிறது.ஏறத்தாழ, 300 ஆண்டுகளுக்கு முன், செங்கல், சாந்து கலவையில் விமானம் அமைத்து, கருங்கல் திருப்பணி செய்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சவுந்திரவல்லி, உகந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர், விநாயகர் என, தனித்தனி சன்னதிகளுடன் கோவில் வளாகம் அமைந்துள்ளது.தற்போது, பெரும்பாலான பகுதி சிதிலமடைந்து, பொலிவிழந்து காணப்படுகிறது; சிவலிங்கம் மட்டுமே சிதிலமின்றி கிடைத்துள்ளது. பக்தர்களின் பெரும் முயற்சியால், கடந்த, 2005 முதல் உகந்தீஸ்வரருக்கு மட்டும் பூஜை நடந்து வருகிறது. மூன்றடி பீடத்தின் மீது, மூன்றடி உயரமுள்ள லிங்கமாக, பெருவுடையார் உகந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.சிறப்புற வழிபாடு நடந்த இக்கோவிலில், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டுள்ளதாகவும், இறைவனின் பேரருள் பெற்றுள்ளதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.கோவில் அர்ச்சகர் மருதாசல குருக்கள் கூறியதாவது:ஈக்கள் முதல் ஈஸ்வரி வரையிலானவர் வழிபட்டு, உகந்தீஸ்வரரின் பேரருளை பெற்றுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்தில், விராடதேசத்தில் தஞ்சம் புகுந்திருந்த பஞ்ச பாண்டவர்கள், உகந்தீஸ்வரரை வழிபட்டுள்ளனர்.கோவிலில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள பரமனுாத்து பகுதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளதாகவும், வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் கீர்த்தி பெற்று விளங்கிய சிவாலயம், இன்று பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது.பெரும்பண்ணையை சேர்ந்த மக்களும், பக்தர்களும், கோவில் திருப்பணிக்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். பெரும்பண்ணை வரதராஜபெருமாள் கோவிலை போல், உகந்தீஸ்வரர் கோவில் திருப்பணியை செய்ய, இறையருள் பெற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X