நடைபாதை அருகே மெகா பள்ளம்; கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
00:00

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை அருகில் தானே இருக்கு... விபத்தில் சிக்கினால் உடனே அட்மிட்' செய்யலாம் என எண்ணி நடைபாதை அமைக்க ரோட்டின் அருகிலேயே பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளது.



சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வெளி, உள் நோயாளிகளாக தினமும் 1,200 பேர் வருகின்றனர். பஸ்சில் வரும் நோயாளிகள் மானாமதுரை ரோடு விலக்கில் இறங்கி 1.5 கி.மீ., நடந்தே மருத்துவமனை வரவேண்டும்.குறுகிய ரோடாக இருப்பதால் பஸ், ஆம்புலன்ஸ் வரும்போது நடைபாதையின்றி அவதிப்பட்டனர். இதை தவிர்க்க ரூ.10 லட்சத்தில் நடைபாதை தளம் அமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க உள்ளனர்.



இதற்கான பணி மானாமதுரை ரோட்டில் இருந்து அரசு மருத்துவமனை நுழைவு கேட் வரை ரோட்டின் மேற்கு பகுதியில் நடக்கிறது.இப்பணியில் ஏராளமான குளறுபடி நிகழ்கின்றன. ரோட்டின் ஓரம் அமைக்கும் நடை பாதை தளம் அகலமாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் பள்ளம் இருப்பது தெரிந்தும் அங்கேயே நடை பாதை தளம் அமைக்கின்றனர்.



மேலும் நடைபாதை தளம் அமைப்பதற்கு முன் அதில் கொட்டுவதற்காக வெளியே இருந்து கிராவல் மண் கொண்டு வரவில்லை. மாறாக இவர்கள் கட்டும் நடைபாதை தளத்திற்கு அருகிலேயே பள்ளம் தோண்டி அதில் இருந்து மண் எடுக்கின்றனர். வாகனங்கள் இப்பள்ளத்தில் விழும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X