காரைக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
காரைக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
00:02

காரைக்குடி : காரைக்குடி ரயில் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது நடைமேடைக்கு நடந்து செல்ல முடியாமல், வயதாவனவர்கள் பெண்கள் உட்பட பயணிகள் பலரும் அவதியைடைந்து வருகின்றனர்.



காரைக்குடி ரயில் நிலையம் வழியாக ராமேஸ்வரம், சென்னை, மயிலாடுதுறை, கோயம்புத்துார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறை, பல்லவன் உள்ளிட்ட பெரும்பாலான ரயில்கள் மூன்றாவது, நான்காவதுநடைமேடையில் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயில்களில் வரும் பயணிகள் இறங்கி நுழைவுவாயில் செல்வதற்கும், நுழைவுவாயிலில் இருந்து நான்காவது, மூன்றாவது நடைமேடைக்கு செல்லவும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திற்கு நீண்ட துாரம் பயணிகள் நடக்க வேண்டியுள்ளது. வயதானவர்களும், பெண்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மேம்பாலத்தை பயன்படுத்தாமல் பலர் ரயில் தண்டவாளத்தை ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.ரயில்கள் இல்லாத நேரங்களில் மூன்றாவது, நான்காவது நடைமேடைக்கு வரும் ரயில்களை, முதல் நடைமேடை வழியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X