சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக300 கி.மீ., நீளமுள்ள நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள்12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகளில் உள்ள ஊரணிகள், கண்மாய்கள், குளங்களின் வரத்துக் கால்வாய்கள் பல இடங்களில் சிதைந்து, முட்புதர் மண்டி காணப்படுகின்றன.இந்தப்பகுதிகளில் உள்ள நீர் வரத்துக்கால்வாய்களை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகதுார் வாரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளில் நகராட்சி நிர்வாகமும்,பேரூராட்சிகளில் பேரூராட்சி நிர்வாகம், கிராமப்புற ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகத்தின்சார்பில் சீரமைப்பு பணி ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கைநகராட்சியில் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டிதொடங்கி வைத்தார்.பின் அவர் தெரிவித்ததாவது:
நீர் வரத்துக்கால்வாய்களைசீரமைக்கும் பணி செப்., 20 முதல் 25 க்குள் சீரமைக்க திட்டமிட்டு பணிகள்தொடங்கப்பட்டுள்ளன. துார் வாரும் பணிகளில் இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும்இடத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இயந்திரங்கள் பயன்படுத்த முடியாதஇடங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள துாய்மை பணியாளர்கள் மூலம் சீரமைப்புசெய்யப்படும்.
இந்த பணியில் ஈடுபடும் துாய்மைப்பணியாளர்களுக்குஉரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு பணிகளில் ஈடுபடுவார்கள். 300 கி.மீ.,நீளமுள்ள வரத்துக்கால்வாய்களை சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாவிட்டால் தொடர்ந்து பணிகள் நடத்திமுடிக்கப்படும், என்றார்.
வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நிரந்தரமாககால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் சீரமைப்பு பணி செய்தாலும் தொடர்ந்து இதே நிலைநீடித்து வருகிறது. சிமென்ட் கால்வாய்கள் அமைத்து நிரந்தர பராமரிப்பு பணிகளைஉள்ளாட்சி நிர்வாகங்கள் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து நகராட்சி ஆணையாளர்கள் திட்டமதிப்பீடு தயாரித்து வழங்கும் படி கலெக்டர்மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பாக்ஸ்சிவகங்கையில் 3 ஊரணிக்குரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு சிவகங்கையில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கிடநகருக்குள் பல்வேறு பகுதிகளில் ஊரணிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊரணிகளின் வரத்துக்கால்வாய்கள் சேதமடைந்து மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பெரு மழை பெய்தாலும் ஊரணிகளில் நீர் வரத்து கேள்விக்குறியாக இருந்தது. அரசுக்கு ஊரணிகளை சீரமைக்க கோரி திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல்கேட்கப்பட்டிருந்தது. சிவகங்கை செட்டி ஊரணி, ஆத்தா ஊரணி, உடையார் சேர்வை ஊரணி ஆகிய மூன்று ஊரணிகளை சீரமைக்க அரசு ரூ. 5.5கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். வரத்துக்கால்வாய்கள் துார் வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, படிகள்அமைக்கப்பட்டு ஊரணிகளை சுற்றி கம்பியில் வேலி அமைக்கும் பணி செய்யப்படவுள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.--------------------