சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பினை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்ககோரி தி.மு.க., சார்பில் 142 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது
திருப்புவனத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன்,சிவகங்கை நகரில் நகர செயலாளர் ஆனந்த் தலைமையில் 27 வார்டுகள், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் காஞ்சிரங்கால் உட்பட 7, மதகுபட்டியில்கிளை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 14, இளையான்குடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் துல்கருணை தலைமையில் 6, காரைக்குடியில் கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் 16, திருப்புத்துார் நகரில் நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் 10, கோட்டையிருப்பு பகுதியில் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமையில் 5, சிங்கம்புணரி, உலகம்பட்டி, புழுதிப்பட்டி ஒன்றிய செயலாளர் பூமணி தலைமையில் 10, தேவகோட்டை நகரில் மகளிர் பிரிவு ஜோன்ஸ்ரூசோ தலைமையில், நகர செயலாளர் பெரிபாலா தலைமையில்2, மானாமதுரையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் பொன்னுசாமி தலைமையில் 3, காளையார்கோவிலில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் 4 இடங்கள், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் சாலைக்கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.