கோயில் அலுவலகத்தில் திரண்ட துப்புரவு பணியாளர்கள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கோயில் அலுவலகத்தில் திரண்ட துப்புரவு பணியாளர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
00:10

பழநி : பழநி மலைக்கோயில் கட்டுப்பாட்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி, உப கோவில்களில் 300 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.6000 ஊதியம் வழங்கப்படுகிறது.கொரோனா காரணமாக 150 பேர் வீதம் இரு பிரிவாக பணிபுரிந்தனர். மாதம் ரூ. 3000 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதில் பிடித்தம் போக குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளனர்.



இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் அனைவருக்கும் பணி வழங்கவும், சம்பளத்தை ரூ. 6000 லிருந்து அதிகரித்து வழங்கவும் வலியுறுத்தினர். பி.எப்., தொகையில் ஒப்பந்த நிறுவனம் செலுத்த வேண்டிய பங்கு தொகை செலுத்தாமல் இருப்பதால், அதைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.இ.எஸ்.ஐ., மூலம் பெற வேண்டிய சலுகைகளை பெற்றுத்தர மனு அளிக்க ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இணை ஆணையர் அலுவலகம் முன் திரண்டு மனு அளித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X