திருப்பூர்:ஆண்டுதோறும் செப். 21ம் தேதி உலக அமைதி தினமாக கொண்டாட, ஐ.நா., சபை அறிவுறுத்தியுள்ளது.இதையொட்டி, 'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இணையும், மெய்நிகர் கொண்டாட்டம் இன்று நடக்கிறது. தனி மனித அமைதியே, உலக அமைதிக்கு அடித்தளம் என்ற அடிப்படையில் இன்று இந்திய நேரப்படி, இரவு 8:30 மணிக்கு இணைய தளம் வாயிலாக, உலக அளவில் பல்லாயிரம் பேர் இணையும் தியானப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு பிரமுகர்கள் உரையாற்றவும், தியான பயிற்சியில் ஈடுபடவும் உள்ளனர். இதில் இணைய எந்த கட்டணமும் இல்லை. www.heartfulness.org/peaceday என்ற இணைய தள முகவரியில் முன் பதிவு செய்து இதில் இணையலாம். மேலும் விவரங்களுக்கு, 97912 66423 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் ஹார்ட்புல்னெஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.