'குட்கா' மாமூலால் உலை... போலீசுக்கு நடுங்குது குலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2021
10:45
பதிவு செய்த நாள்
செப் 21,2021 00:40

பே ராசை பெருநஷ்டம்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க,'' என, பெருமூச்சுடன் ஆரம்பித்தாள் சித்ரா.''ஓ... அவிநாசி மேட்டரா...?''''அட, பரவாயில்லயே, கரெக்டா கண்டுபிடிச்சுட்டே. லஞ்ச ஒழிப்பு துறையில சிக்கிய அந்த லேடி அதிகாரி மேல, பலரும் உயரதிகாரிகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினதால, அவரும் 'வார்ன்' பண்ணியும், கேட்கலையாம். இப்ப பாரு, பணத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''கல்லா கட்றதுல கட்சிக்காரங்களை மிஞ்சிடுவாங்க போலயே,'' என்ற மித்ரா, ''எப்பவோ, எந்த காலத்துலயோ சி.எம்., கூட எடுத்த பழைய போட்டோவை, நல்லா தெரியற மாதிரி, பாக்கெட்ல வைச்சுக்கிட்டு, பல்லடம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஆபீசுக்கு போய், அதிகாரிகள மிரட்டி வசூல் வேட்டை நடத்திகிட்டு இருக்காராம் ஆளுங்கட்சி தொண்டரணி நிர்வாகி,''''நான், சி.எம்., கூட நேரடியா பேசுவேன்னு, 'பில்டப்' குடுத்து, கடைசியா கமிஷன்ல வந்து நிப்பாறாம். வேற வழியில்லாம அதிகாரிகளும், கேக்கறத குடுத்துடுவாங்கலாம்...'' சொன்ன அவள், மொபைன் போனில் 'மிஸ்டு கால்' லிஸ்டில் இருந்த ஜெயப்பிரகாஷ்க்கு போன் செய்தாள். ஆனால், 'சுவிட்ச் ஆப்' என்ற ரிகார்ட் வாய்ஸ் வந்ததும் போனை அணைத்து வைத்தாள்.''மித்து, பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டோரமா நகராட்சிக்கு சொந்தமான ஒரு ஓட்டல் இருக்கு; எப்போ, எப்படி, யாருக்கு ஏலம் விட்டாங்கன்னே தெரியலை. திடீர்ன்னு பார்த்தா, ராத்திரியோட ராத்திரியா கடையை புதுப்பிச்சு, விடியக்காலையில திறப்பு விழா நடத்திட்டாங்க. எல்லாம் அந்த விநாயகருக்கே வெளிச்சம்,'' சொன்ன சித்ரா, ''உள்ளாட்சி இடைத்தேர்தல், இன்னும் களைகட்டலையே மித்து?'' என, தேர்தல் குறித்து ஆரம்பித்தாள்.திருவிளையாடல்

''இடைத்தேர்தல் தானே அக்கா. பல இடத்தில, எதிரும், புதிருமா இருக்கற அ.தி.மு.க., தி.மு.க.,காரங்களே 'டீல்' பேசியிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க,''''என்னடி சொல்ற, இது எங்கே?''''அவிநாசிக்கு பக்கத்தில இருக்க கருவலுாரில் தான் இந்தக்கூத்து. அங்க தலைவர் பதவிக்கு இடைதேர்தல் நடக்குது. ஊருக்குள்ள அரசியல் அனல் வீசினாலும், கட்சிக்காரங்களுக்குள்ள ஒரு 'பந்தம்' இருக்கு. ஊராட்சியில பம்ப் ஆபரேட்டரா இருந்த ஒருத்தரு, வேலையை ராஜினாமா பண்ணிட்டு, தலைவர் பதவிக்கு நிக்கிறாரு,''''அவருக்கு தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சிக்காரங்களும் ஆதரவு கொடுத்து, பொது வேட்பாளரா நிக்க வைச்சு, ஜெயிக்க வைக்கலாம்னு பேசினாங்களாம். ஆனா, வேட்பு மனு தாக்கல் செஞ்சத்துக்கு அப்புறமா, 'அவருதான் எங்க கட்சியோட அதிகாரப்பூர்வ வேட்பாளர்'ன்னு அறிவிக்க, ஆளுங்கட்சிக்காரங்க ரகசிய திட்டம் போட்டிருக்காங்க,''''இதை தெரிஞ்சுக்கிட்ட அ.தி.மு.க., நிர்வாகிங்க உஷாராகி, போன தடவை நடந்த தேர்தல்ல ரெண்டாம் இடம் பிடிச்ச தங்களோட கட்சிக்காரரை, களமிறக்க போறாங்களாம். இந்த, அரசியல் திருவிளையாடல், 'முருகனையும், அவங்க அப்பாவையும்' சுத்தியே இருக்குதாம்,'' என்றாள் மித்ரா.''திருப்பூரில போன வாரம், சமுதாய வளைகாப்பு நடத்தினாங்க. அதில, தெற்கு தொகுதி வி.ஐ.பி., பேசும் போது, 'முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்குன்னு நிறைய திட்டங்கள், சலுகைகளை வழங்கியிருக்காரு. இலவச பயண சலுகையை பயன்படுத்தி எத்தனை பெண்கள் வேலைக்கு போறீங்கன்னு கேட்டிருக்காரு,''''ஒருத்தர் மட்டும் கையை துாக்க, அவருக்கு தர்ம சங்கடமா போச்சாம். உடனே, நிறைய பேரு டூவீலர் பயன்படுத்துவீங்கன்னு நினைக்கிறேன்; பெட்ரோலுக்கு, 3 ரூபாய் குறைச்சதும், முதல்வர் ஸ்டாலின் தான் சொல்லி சமாளிச்சாராம்,'' என்றாள் சித்ரா.பொறுத்தது போதும்?
''சில இடத்தில ஆளுங்கட்சிக்காரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்தமாம்'' என, அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, ''திருப்பூர் ஒன்றியத்தில, வளர்ச்சிப்பணிக்கு பூமி பூஜை போடறது போன்ற அரசு சார்ந்த நிகழ்ச்சி தொடர்பா, அ.தி.மு.க., காரங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கிறதை அதிகாரிங்க வழக்கமா வைச்சிருக்காங்க; ஆட்சி மாறியும் காட்சி மாறலையாம்,''''அப்படித்தான், கணக்கம்பாளையம் ஊராட்சியில இருக்கற ரேஷன் கடையை, ரெண்டா பிரிச்சு, புதிய கடை திறந்தாங்க. அதுக்கு, தெற்கு வி.ஐ.பி.,க்கே அழைப்பு விடுக்கலையாம். கடுப்பான அவரு, அதிகாரிகளை கூப்பிட்டு 'அர்ச்சனை' பண்ணியதால் தான், அழைப்பு விடுத்தாங்களாம்,'' என்றாள்.''மாட்டுச்சந்தைக்குள்ள மாடு விக்க, வாங்க போறவங்ககிட்ட இருந்து, கார்ப்ரேஷன் சார்பில் ஒரு சுங்கம், சந்தையை நடத்தறவங்க ஒரு சுங்கம்ன்னு, ரெண்டு சுங்கம் வசூலிக்கிறாங்களாம். இதனால, ஆவேசப்பட்ட வியாபாரிகள் 'பொறுத்தது போதும் பொங்கி எழுங்கிற கதையா, கலெக்டர் கவனத்துக்கு கொண்டு போக, தயாராகிட்டாங்களாம் மித்து,'' என்றாள் சித்ரா.இது சாதாரணமப்பா...

''ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் நிகழ்ச்சியில, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒருத்தர் விடாம ஆஜர் ஆகிட்டாங்க. மாவட்ட செயலாளராக இருக்கற பொள்ளாச்சிக்காரரை பார்த்து, ஒவ்வொருத்தரும் 'செல்பி' எடுத்துக்கிட்டாங்களாம்,''''என்னடா இது... எதுக்கும் தலை காட்டாத ஆட்கள், இப்போ வந்திருக்காங்களேன்னு தொண்டர்கள் ஆச்சரியப்பட்டாங்களாம்...''''கார்ப்ரேஷன் எலக்ஷன் வரப்போகுதுல்ல. திரும்பவும் 'சீட்' வாங்க வேண்டாமா?'' என்ற மித்ரா, ''ஏன்க்கா... ரெண்டு நாளைக்கு முன்னாடி திருப்பூருக்கு வந்த ஹெல்த் மினிஸ்டர், பக்கத்தில உள்ள காலேஜில நடக்குற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிடறதா சொல்லிட்டு திடீர்ன்னு, உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 'விசிட்' போயிட்டாராமே,'' என கேட்டாள்.''ஆமா மித்து. அந்த கல்லுாரியின் பொறுப்பாளர், கமல் கட்சியில மாநில பொறுப்புல இருக்காங்களாம். அந்த காலேஜ்க்கு அமைச்சர் போறப்ப, அவங்களும் கலந்துக்கிட்டு, அவங்க எதாவது பேசப்போய், அதனால, பிரச்னை எதுவும் வந்துடக்கூடாதுன்னு தான், 'ஓவர் நைட்'ல இடத்தை மாத்தியிருக்காங்க,'' என்ற 'உள்விவகாரத்தை' உள்ளபடி சொன்னாள் சித்ரா.''அக்கா... காணொலி காட்சின்னு சொல்லி, மினிஸ்டர்களை 'டிவி' பார்க்க வச்சுட்டாங்க தெரியுமா?''''இல்லையே...''''மாவட்ட, ஒன்றிய பகுதியில் காணொலி மூலமா, நிர்வாகிங்க கிட்ட சி.எம்., பேசப்போறார்ன்னு சொன்னதால, மாவட்டத்துல, 10 இடங்கள்ல, தி.மு.க., காரங்க செஞ்சிருந்தாங்க. 'லோக்கல்' மினிஸ்டர் ரெண்டு பேரும் 'டிவி', முன்னாடி உட்கார்ந்து இருந்தாங்க,''''ஆனா, காணொலியில யாரும் பேசவே முடியலையாம். தலைமையில இருந்து சொன்னதை மட்டும் பார்த்து, ஏமாந்துட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.'குட்கா' வாசம் வீசுது!'
'குட்கா விவகாரத்தில், ஸ்டேஷன் போலீஸ்காரங்க குலைநடுங்கிப் போய் இருக்காங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி, மங்கலம் ரோட்ல, ஒரு ஓட்டல்ல குட்காவை பதுக்கி வைச்சதா சொல்லி, பீகாரை சேர்ந்த அண்ணன் தம்பியை அரெஸ்ட் பண்ணாங்க. இவங்க ரெண்டு பேரும், போலீசுக்கு, 'இன்பார்'மராக இருந்தவங்க. எங்கே குட்கா விற்பனை நடக்குது, எங்கே இருந்து வருதுன்னு என, எல்லா விபரத்தையும் சொல்லிட்டு இருந்தாங்க,''''அதுமட்டுமில்லாம, எந்ததெந்த போலீஸ்காரங்க குட்கா 'மேட்டர்'ல கல்லா கட்றாங்கற விஷயம் கூட அவங்களுக்கு அத்துபடியாம். இப்போ, அவங்க மேலயே நடவடிக்கை பாய்ந்ததால, நம்ம பெயரை வெளியோ சொல்லிடுவாங்களோன்னு சிலர் நடுக்கத்துல இருக்காங்க,'' என்றாள்.''ஆமாங்க்கா. சத்தமே இல்லாமல், திரும்பவும் 'சிட்டி'க்குள்ள குட்கா சேல்ஸ் நடக்குதாம். கமிஷனர் திரும்பவும் 'சாட்டைய சுத்துனா தான்' சரியாகும்,'' சொன்ன மித்ரா, ''முதலிபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் புதுசா கட்டி திறப்பு விழா நடக்கலையாம்,'' கேள்வி கேட்டாள்.''என்ன மேட்டர்டி'''அந்த பஞ்சாயத்தில தலைவர் எதிர்க்கட்சிக்காரர். அதனால, துணை தலைவரா உள்ள ஆளுங்கட்சி நிர்வாகி, 'சத்தமில்லாம' காய் நகர்த்தி, 'மினிஸ்டர் தான் திறக்கணும்னு,' சொல்லிட்டாராம். அதனால, விழா, 'பென்டிங்' என்றாள் மித்ரா.''ஓ.கே., மித்து. நா கெளம்றேன்,'' ஹெல்மெட் சகிதம் வெளியேறினாள் சித்ரா.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X