திருப்பூர்:கட்டணம் வழங்க ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தாமதிப்பதால், திருப்பூர் பின்னலாடை ஜாப்ஒர்க் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆர்டர் பெறும் பின்னலாடை நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலம் ஆடை தயாரித்து, அனுப்பி வைக்கின்றன. ஆடைக்கான தொகையை வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கியபினரே, ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு உரிய கட்டண தொகையை, ஆடை உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர்.வழக்கமாக ஓரிரு மாதங்களுக்குள் கட்டணம் வழங்கப்பட்டு விடும். கொரோனாவுக்குப்பின், கட்டண தொகையை வழங்க ஆடை உற்பத்தியாளர்கள் இழுத்தடிப்பதால், ஜாப்ஒர்க் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.சாய ஆலை உரிமை யாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சாய ஆலைகளுக்கு ஆர்டர் வருகை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், ஜாப்ஒர்க் கட்டண தொகைகளை வழங்க, நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இழுத்தடிக்கின்றனர்.சாய ஆலைகள் மட்டுமல்ல, நிட்டிங், பிளீச்சிங், பிரின்டிங் என, அனைத்து ஜாப்ஒர்க் துறையினரும் இப்பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர்.கொரோனாவுக்குப்பின், ஜாப்ஒர்க் நிறுவனங்களும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. கட்டணம் வழங்க தாமதிப்பதால், அடுத்தடுத்த ஆர்டர்களை கையாளுவது சிக்கலாகிறது.ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது. நெருக்கடியான இந்த சூழலை கருத்தில் கொண்டு, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அதிகபட்சம் 90 நாட்களுக்குள் கட்டண தொகைகளை வழங்கி, ஜாப்ஒர்க் துறையினருக்கு கைகொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கொரோனாவுக்குப்பின், ஜாப்ஒர்க் நிறுவனங்களும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. கட்டணம் வழங்க தாமதிப்பதால், அடுத்தடுத்த ஆர்டர்களை கையாளுவது சிக்கலாகிறது. ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது.