தொண்டாமுத்தூர்:கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, 11 நாட்களுக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.காலை, 9:00 முதல் பகல், 2:00 மணி வரை மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் திரண்டனர். நேற்று, 19 சுற்றுலா பயணிகள் மட்டுமே, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர்.மற்றவர்களுக்கு வனத்துறையினர் நேரடியாக டிக்கெட் வழங்கினர். சாடிவயல் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்ல, வனத்துறை சார்பில், ஒரு வாகனம் மட்டுமே இயக்கப்பட்டது.இதனால், டிக்கெட் வாங்கிய பின்னரும், சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்தனர். பகல், 2:00 மணிக்கு மேல் வந்த சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால், வெளிமாநிலங்களில் இருந்து வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.