செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளில், விருப்பமனு பெறப்பட்டது.
இதில் தி.மு.க.,வில் நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.,வில் நேர்காணல் தவிர்க்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டதால், பெயரளவில் விருப்பமனு பெற்று, நேர்காணல் நடத்தியதாக கூறப்படுகிறது.விருப்ப மனு அளித்த சில கட்சியினர் கூறியதாவது:தேர்தல் அறிவித்து மனு தாக்கலுக்கு குறுகிய காலமே உள்ளதால், நேர்காணல் நடத்தப்படவில்லை என, கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.அப்படியிருக்கும்போது எதற்காக அனைவரிடமும் விருப்பமனு பெற வேண்டும். போட்டியிடுவதற்காக ஒவ்வொருவரிடமும் வாங்கிய பணம் என்னாகும். ஆசை காட்டி மோசம் செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.