வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு 'பைன்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு 'பைன்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:01

கோவை:கடந்த, 10 நாட்களில் அனுமதியின்றி காட்டுக்குள் நுழைந்த, 17 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். கோவை வனக்கோட்டத்தில் ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில், வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படி அத்துமீறி நுழைபவர்களை, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் கூறுகையில், ''வனத்துக்குள் அத்துமீறி நுழைவது சட்டப்படி குற்றம் என்பது தெரிந்தே, ஒரு சிலர் வனத்துக்குள் நுழைகின்றனர். கடந்த 10 நாட்களில், தலா ரூ.1,000 வீதம், 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X