'சூடு' புடிச்ச கடைக்கு தண்ணி ஊத்தியாச்சு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
'சூடு' புடிச்ச கடைக்கு தண்ணி ஊத்தியாச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:02

உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலை, ஏ.பி., சத்திரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்புமனு படிவம் வாங்குவோர், மனு தாக்கல் செய்வோர், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், செய்தி சேகரிக்கும் நிருபர்கள் என, பல தரப்பினரும், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள ஒரே ஒரு டீ கடையில் குவிவர்.உள்ளாட்சி தேர்தலால், அந்த டீ கடையில், விற்பனை சூடு பிடித்த நிலையில் பவுர்ணமி நாளான நேற்று, தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன், 10:00 மணியில் இருந்தே வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்ல முயன்றனர்.

போலீசார் வேட்பாளரையும், முன்மொழிபவரை மட்டுமே செல்ல அனுமதித்தனர்.அனுமதி மறுக்கப்பட்டோர் எதிரே உள்ள டீ கடை குவிந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாத அந்த கடையை மூடும்படி போலீசார் உத்தரவிட்டனர்.உள்ளாட்சி தேர்தலால் வியாபாரம் சூடு பிடித்த நிலையில், போலீசாரின் உத்தரவு என்பதால், வேறு வழியின்றி நொந்துபோன உரிமையாளர், டீ கடையை மூடிவிட்டு நடையை கட்டினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X