வாங்குவது ஒன்று... கட்டுவது மற்றொன்று! நகரமைப்பு பிரிவினர் வைத்தார்கள்'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:03

கோவை:கோவை மாநகராட்சியில், அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டிருந்த இரு கட்டடங்களை, நகரமைப்பு பிரிவினர் நேற்று 'சீல்' வைத்தனர்.கோவை மாநகராட்சி பகுதியில், வரைபட அனுமதி பெறாமல் கட்டடம் கட்டுவது, 'ரிசர்வ் சைட்டு களை மீட்பது உள்ளிட்ட நகரமைப்பு பிரிவு வேலைகளை, உதவி/ இளம் பொறியாளர்கள் செய்ய வேண்டுமென, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சமீபத்தில் உத்தரவிட்டார்.அதன்படி, பொறியியல் பிரிவு அதிகாரிகள் வார்டு வாரியாக ஆய்வு பணியை துரிதப்படுத்தியுள்ளனர். வரைபட அனுமதிக்கு மாறாக கட்டியுள்ள கட்டங்களுக்கு, நோட்டீஸ் வழங்குகின்றனர்.மத்திய மண்டலம், 48வது வார்டு, ரத்தினபுரி, விநாயகர் கோவில் வீதியில், சுலோச்சனா என்பவர், 368.71 சதுர மீட்டருக்கு, தரை தளம் மற்றும் முதல் தளம் மட்டும், 4 வீடுகள் கட்டுவதற்கு, மாநகராட்சியில் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், 1100.73 சதுர மீட்டர் பரப்புக்கு, மூன்று தளங்களாக, 16 வீடுகள் கட்டியுள்ளார்.இதேபோல், சந்திர சேகர் என்பவர், 296.65 சதுர மீட்டருக்கு 3 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருக்கிறார். 916.93 சதுர மீட்டர் பரப்புக்கு, மூன்று தளங்களாக, 9 வீடுகள் கட்டியிருக்கிறார். அனுமதிக்கு மாறாக கட்டியுள்ள இவ்விரு கட்டடங்களையும், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள், ரத்தினபுரி போலீசார் பாதுகாப்புடன் நேற்று ஆய்வு செய்து, 'சீல்' வைத்தனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அனுமதியின்றி கட்டடம் கட்டுவது தவறு. வரைபட அனுமதிக்கு மாறாக கட்டடங்கள் கட்டியிருந்தால், நோட்டீஸ் வழங்கி, 'சீல்' வைக்கும் நடவடிக்கை பாயும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X