உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் ஒன்றியத்தின் 18 வார்டு உறுப்பினர் இடங்களில் ஒன்று மட்டும் பா.ஜ.,வுக்கு வழங்கப்படுவதாக அ.தி.மு.க., தெரிவித்துள்ளது.
ஆனால் ஆறு இடங்கள் வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.மாவட்ட அளவில் இரு கட்சி நிர்வாகிகள் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், மாநில அளவில் பேச்சு நடத்த முயற்சி நடக்கிறது.'எங்கள் கட்சியினர் போட்டியிட விரும்பும் இடங்களை முடிவு செய்தபின் ஒதுக்கப்படும். பா.ஜ., நிர்வாகிகளுக்கு சாதகமான இடங்களை கொடுக்க முடியாது' என அ.தி.மு.க., சார்பில் கூறப்படுவதால், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.ஆனால் பா.ஜ., 'நாங்கள் ஜெயிக்க கூடிய வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்குங்கள்' என, கதவை தொடர்ந்து தட்டுகிறது.அ.தி.மு.க., கேட்டும் கேட்காமல் இருப்பதால் 'தனித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்' என, பா.ஜ., நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.