கோவை,:மாநகர பகுதிகளில் தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்ட, 20 பேரை கைது செய்த போலீசார், 562 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இச்சூழலில் மாநகர பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை குறித்து, நேற்று முன்தினம் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில், சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம், தொட்டிப்பாளையம் பிரிவு, ஈச்சனாரி, வெரைட்டிஹால் ரோடு, சாய்பாபாகாலனி, ரத்தினபுரி, ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனுார், பீளமேடு, சவுரிபாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, 20 பேர் கைது செய்யப்பட்டனர். 562 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.