குனியமுத்தூர்:குனியமுத்தூர் ஆதி சக்தி நகர், தெற்கு வாய்க்கால் சாலையில் நேற்று முன்தினம் மதியம், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கொடிக்கம்பம் நட்டனர். இதனை போலீஸ் ஏட்டு மகேஷ் வீடியோ பதிவு செய்தார். இதற்கு அமைப்பை சேர்ந்த இப்ராஹிம், ஷாநவாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, பதிவு செய்ய விடாமல் தடுத்தனர்.ஏட்டு மகேஷ் புகாரில், இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.