கோவை:தொண்டாமுத்துாரை சேர்ந்தவர் ஆறுசாமி, 43; பஸ் டிரைவர். இந்த பஸ்சை லாலி ரோடு சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்துவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு நிறுத்திய பஸ்சை, நேற்று காலை வழக்கம் போல், பஸ்சை வெளியே எடுக்க பின்நோக்கி இயக்கினார்.அப்போது பஸ்சின் பின் சக்கரத்தின் அருகே அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க நபர் துாங்கி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. சக்கரத்தில் சிக்கிய அந்த நபர் அலறியபடியே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போக்குவரத்து புலனாய்வு மேற்கு பகுதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, பஸ் டிரைவரை கைது செய்தனர். உயிரிழந்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.