கோவை:சுகுணாபுரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஆசிரியர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இந்திய தொழில்நுட்ப கழக (ஏ.ஐ.சி.டி.இ.,)தலைவர் அனில் சகஸ்ரபுதே பேசியதாவது:பாட திட்டத்திலும், கற்பிப்பதிலும் நுாதன முறையை, இளம் பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர்களை அதிக ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்.உயர் கல்விக்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் இத்திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும்.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் பன்முகத் திறமைகள் வளரும். புதிய கல்வி கொள்கையின் மூலம் அவர்களின் ஆய்வுத்திறன் மற்றும் வேலை திறனும் உயரும்.ஆசிரியர்கள் தங்கள் துறையில் தற்போதைய முன்னேற்றத்தை, வளர்ச்சியை தெரிந்திருப்பது அவசியம். மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுப்பதன் மூலம், தொழில்துறையில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜேனட், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.