இளநிலை மாணவர்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இளநிலை மாணவர்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:15

கோவை:கோவை அரசு கலை கல்லுாரியில் இளநிலை மாணவர்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளையும் (22ம் தேதி), முதுநிலை மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு 27ம் தேதியும் நடக்கும் என, கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இக்கல்லுாரியில் இளநிலை பிரிவில் முதல் இரண்டு கலந்தாய்வில், மொத்தமுள்ள 1,433 இடங்களில், 1,114 இடங்கள் நிரம்பியுள்ளன. முதுநிலை பிரிவில், 552ல் 373 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். காலியாக உள்ள இடங்களுக்கும், அரசு அறிவித்துள்ள 25 சதவீத கூடுதல் இடங்களுக்கும் சேர்த்து, கலந்தாய்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.25 சதவீத கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்க்க, அரசு கலை கல்லுாரி தரப்பில் பாரதியார் பல்கலை தரப்பில் அனுமதி பெறப்பட்டுள்ளது.கலை பிரிவுகளில் எவ்வித சிக்கல்களும் இன்றி, 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு வழிகாட்டுதலின் படி, அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப, குறைவான இடங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X