தி.மு.க.,வினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு கண்டனம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தி.மு.க.,வினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு கண்டனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:27

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும், விலைவாசி உயர்வு மற்றும் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவற்றை கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், நேற்று தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*அன்னுார் தெற்கு ஒன்றியத்தில், செந்தாம்பாளையம், கணேசபுரம், கெம்பநாயக்கன்பாளையம், உள்பட 25 இடங்களில் தி.மு.க., சார்பில்,ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.அன்னுார் நகர் மற்றும் வடக்கு ஒன்றியத்தில் பசூர், பொகலுார் உள்ளிட்ட 25 இடங்களில், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.தி.மு.க., நிர்வாகிகள் கறுப்புசட்டை அணிந்தும், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.* சூலுார், கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், கரவளி மாதப்பூர், காங்கயம்பாளையம், பட்டணம், பீடம் பள்ளி, ராசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.நகர பொறுப்பாளர் கணேஷ், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.*மேட்டுப்பாளையத்தில், நீலகிரி எம்.பி., ராஜா அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். காரமடை திம்மம்பாளையத்தில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில், கூட்டணி கட்சியினர், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.*ஜோதிபுரத்தில், காங்கிரஸ் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னராஜ், மாநில செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், ஜங்கமநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் மணி, தி.மு.க., ஒன்றியசெயலாளர் கார்த்தி,வட்டாரத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.-நமது நிருபர் குழு-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X