அள்ளிய நகைகள் அனைத்தும் கவரிங்: திருடர்கள் ஏமாந்த சுவாரசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2021
03:35
பதிவு செய்த நாள்
செப் 21,2021 01:32

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, தங்கம் எனக் கருதி, ஜுவல்லரியில் திருடிய நகைகள் அனைத்தும் கவரிங் என தெரிய வந்து, திருடர்கள் ஏமாந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.



கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் இன்ஜினியர் வீட்டில், 76 பவுன் நகை மற்றும், 4.5 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போயின.இதுதொடர்பாக துடியலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அத்திப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 22, கோவை நாராயணபுரத்தில் வசிக்கும் கண்ணன், 42, ஆகியோர் திருடியது தெரியவந்தது.



மேலும், இதில் தொடர்புடைய திருநெல்வேலி மதியழகன் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருட்டுப்போன நகைகளை மீட்கச் சென்ற துடியலுார் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு இடங்களில், சுரேஷ் மற்றும் கண்ணன் திருடி வந்துள்ளனர்.அதில், இடையர்பாளையத்தில் உள்ள பேஷன் ஜுவல்லரி கடை ஷட்டரை உடைத்து, நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். சாக்கில் அள்ளிய அத்தனையும் தங்கம் என, மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நகைகளை விற்பனை செய்ய முயன்றபோதுதான், அவை அனைத்தும் முலாம் பூசப்பட்ட நகைகள் என, தெரியவந்தது.



ஏமாந்த இருவரும், அதை விற்பனை செய்ய முடியாமல், மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தனர். போலீசாரின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., ராஜபாண்டியன், கூறுகையில், "முலாம் பூசப்பட்ட நகைகள் என்றாலும், ஒவ்வொன்றும் ஒரு கிராம் எடையுள்ள தங்கத்தைக் கொண்டு முலாம் பூசப்பட்டு உள்ளன. பேஷன் ஜுவல்லரியில் திருடப்பட்ட முலாம் பூசப்பட்ட நகைகளின் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் ஆகும். இவை முறைப்படி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
23-செப்-202117:23:45 IST Report Abuse
INDIAN Kumar மின்னுவதெல்லாம் பொன்னல்ல இது தெரியாத திருடர்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202113:32:49 IST Report Abuse
jayvee திருடுவதற்குகூட ஒரு அறிவு வேண்டும்..நீங்கள் எல்லாம் பட்டறையில் பயிற்சி பெறவேண்டும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-செப்-202115:14:27 IST Report Abuse
D.Ambujavalli இது பேஷன் ஜூவல்லரி கடை இங்கு ஒரு கிராம் பூச்சுடன் தான் நகைகள் விற்கப்படும் கடை ஒன்றும் பிராடு இல்லை பாவம் போர்டில் ஜூவல்லரி என்று பார்த்ததுமே தங்கம் கிடைக்கும் என்று ஏமாந்த திருடர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X