மூடாக்கு அமைத்து பயிர்களை காக்கலாம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை 'அட்வைஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:39

ஆனைமலை:பயிர்களை காக்க மூடாக்கு அமைப்பதன் நன்மைகள் குறித்து, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை, கோகோ, ஜாதிக்காய் சாகுபடி பிரதானமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைத்து தென்னை மரத்தை காக்க, மூடாக்கு அமைக்கின்றனர்.ஒன்றியம் முழுவதிலும் பலரும் மூடாக்கு அமைத்து, அதில் மண் புழு உரம் பயன்படுத்தி, பயிர்களை காத்து வருகின்றனர். இந்நிலையில், மூடாக்கு அமைப்பதன் பயன்கள் குறித்து வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை வருமாறு:வறட்சியான பகுதிகளில், சாதாரண மூடாக்கு அமைப்பதை காட்டிலும், உயிர் மூடாக்கு அமைப்பது சிறந்தது. பாத்தியில் பச்சையாக உள்ள தக்கைப்பூண்டு செடிகளை படுக்கை போன்று அமைத்து, அதன் மீது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா கலக்கப்பட்ட மக்கிய மாட்டு சாணக்கழிவு போட வேண்டும். அதன் மீது தென்னை ஓலைகள் மூடாக்காக அமைக்கலாம்.இதனால், மண்ணுக்கு அதிகப்படியான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கிடைப்பதுடன், உயிர் ஊக்கியாகவும் பயன்படுகிறது.கடும் வறட்சி நீடித்தாலும், தென்னை மரங்களுக்கு மண்ணில் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். தென்னை ஓலைகள் மக்கிப்போய் மண்புழுக்களுக்கு சிறந்த உரமாகி, அவற்றின் பெருக்கம் அதிகரிக்கும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை தென்னை மரங்களுக்கு இதுபோன்று உயிர் மூடாக்கு அமைக்கலாம்.மேலும், தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில், மூடாக்குடன் தென்னை நார் துகள் பயன்படுத்தலாம். தென்னை நார் அதிக நேரம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வதால், தண்ணீரின் பயன்பாடும் குறையும். மேலும், 'டிரென்ஜ்' அமைத்து அதிலும் தென்னை கழிவுகளை பயன்படுத்தி மூடாக்கு அமைக்கலாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X