செய்திகள் சில வரிகளில்... சோளம் அறுவடை தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:42

பொள்ளாச்சி பகுதியில், நடப்பாண்டில் பெரும்பாலும் மானாவாரியாக சோளப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை மழைக்கு உழவு செய்து விதைத்த சோளப்பயிர், தென்மேற்கு பருவமழைக்கு நன்கு செழித்து வளர்ந்து காணப்பட்டது.ஆனால், பருவமழைக்காலம் கடந்தும் மழைப்பொழிவு நீடித்ததால், சோள தானிய கதிர்கள், கரும்பூட்டை நோயால் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால், சோளப்பயிரை அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.



விவசாயிகள் கூறுகையில், 'நோய் தாக்குதலால், சோளப்பயிரில் தானிய விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. விதைக்கு கூட பற்றாத அளவுக்கு தான் விளைச்சல் கிடைத்துள்ளது. கால்நடை தீவனத்துக்காவது சோளத்தட்டைகள் கைகொடுக்கும் என்ற நிலையில், மழை இல்லாத நாட்களை பயன்படுத்தி, தட்டைகள் அறுவடை செய்யப்படுகிறது,' என்றனர்.யானைகளால் தொழிலாளர்கள் பீதிவால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.



பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் முடீஸ் நகருக்குள் நுழைந்த, யானைகள் அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை சேதப்படுத்தின. மற்றோரு யானைகள் கூட்டம், நேற்று நல்லமுடி எஸ்டேட் தேயிலை காட்டில் பகல் நேரத்தில் முகாமிட்டதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் அவதிப்பட்டனர். யானைகள் வரவால், தொழிலாளர்கள் காட்டிலும், வீட்டிலும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.



'ஆஷா' பணியாளர்கள் போராட்டம்



வால்பாறையில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், தற்காலிகமாக பணியாற்ற, 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த, 15ம் தேதி முதல் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும், 'ஆஷா' சுகாதார பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க கோரி, ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



'ஆஷா' சுகாதார பணியாளர்கள் கூறுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளாக, சுகாதார தன்னார்வலர்களாக (ஆஷா) பணிபுரிந்து வருகிறோம். வீடு, வீடாக சென்று முதியோர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்கிறோம். தற்போது, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், மகளிர் குழுவில் உள்ளவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் எங்களுக்கு, பணி வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம்,' என்றனர்.


நிவாரண உதவித்தொகை வழங்கல்


உடுமலை ஒன்றிய, போடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு சுண்டக்காம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் மயிலாத்தாள் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த, பிப்., மாதம், 10ம் தேதி, பணியின் போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, உதவித்தொகை வேண்டி, உரிய கருத்துருக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


அதன்பேரில், 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை ஒதுக்கப்பட்டது. அவரது மகள் செல்லம்மாளிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. பி.டி.ஓ., க்கள் ரொனால்ட்செல்டன், மணிகண்டன், ஊராட்சித்தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.



ரோடு சீரமைக்காததால் அதிருப்தி


பொள்ளாச்சி --- கோவை ரோட்டில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் கிளை - 1 மற்றும் 2க்கு செல்லும் வழித்தட ரோடு, பிரதான நெடுஞ்சாலையில் இணையும் இடத்திலேயே, குண்டும், குழியுமாக சிதைந்து காணப்படுகிறது.மேலும், நுழைவுவாயில் முன், ரோடு பெரிய பள்ளமாக காணப்படுகிறது. இதனால், இரண்டு கிளைகளுக்கும் பஸ்கள் இயக்கிச் செல்லும் பஸ் டிரைவர்கள் மற்றும் அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.


ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஸ் டிரைவர்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கரும்பு கிரையத்தொகை அறிவிப்பு மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2020- 21ஆம் ஆண்டு கரும்பு அரவை ஏப்.,16ல் துவங்கி, ஜூலை 1ம் தேதி நிறைவடைந்தது. இதில், 63, 560 டன் கரும்பு அரவை செய்யப்பட்ட து.ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு, 2,707 ரூபாய் 50 பைசா வீதம் மொத்தம் 17 கோடியே, 20 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.



தற்போது, 2022ம் ஆண்டுக்கான அரவைக்கு முன்பதிவு நடந்து வருகிறது.இதுவரை, 1,370 ஏக்கர் கன்னி கரும்பு, 950 ஏக்கர் கட்டை கரும்பும் சேர்த்து, மொத்தம், 2,320 ஏக்கர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு வழங்கிய கரும்பு கிரைய தொகையை விட, நடப்பாண்டிற்கு கூடுதலான கிரையத்தொகை வழங்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.



கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, 2022ம் ஆண்டு அரவைக்கு வழங்கப்படும், ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2,900 ரூபாய் நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஒரு டன்னுக்கு, 192 ரூ பாய் கூடுதல் ஆகும்.பிரதமர் மோடி பிறந்த நாள் விழாஉடுமலை வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாள் விழா நடந்தது.பெண்கள், 71 பால் குடங்கள் எடுத்து வந்து, சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.மேலும், 71 கிலோ கேக் வெட்டியும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கியும் கொண்டாடினர்.வடக்கு ஒன்றிய தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான நாகமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ருத்ரகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X