கொரோனா அச்சம் அதிகரிப்பால்...கல்வி பாதிப்பு! 35 சதவீத மாணவர்கள் 'ஆப்சென்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:44

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கொரோனாவுக்கு அச்சப்பட்டு பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதால், 35 சதவீதம் வருகை குறைந்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்கள் உள்ளன.



இவற்றில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் -- 50; மற்றும் தனியார் பள்ளிகள் -- 41 உள்ளன. பள்ளிகளில், 7,100 மாணவர்கள் படிக்கின்றனர்.கொரோனா பரவல் அதிகரிப்பால், பள்ளிகள் பூட்டப்பட்ட போது, மாணவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்று வந்தனர்.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த, 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்கின்றன. இதனால், பெரும்பாலான பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.



இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகரிப்பின் காரணமாக, மாணவர்கள், பெற்றோர்களிடையே கொரோனா தொற்று அச்சம் அதிகரித்துள்ளது.இதனால், பெற்றோர் பலரும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளதால், மாணவர்கள் நேரடி வகுப்புக்கும் செல்லாமல், 'ஆன்லைன்' வகுப்பும் இல்லாமல், கல்வியை இழக்கின்றனர்.மாணவர்கள் பலர், வகுப்புகளில் பங்கேற்காமல், 'ஆன்லைன்' மொபைல் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கின்றனர். சிலர் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.


தற்போது, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில், 65 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். கல்வி பாதிக்காமல் இருக்க, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும்; அதேபோல், பள்ளி செல்லா மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வித்துறையினர் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்த வேண்டும்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கண்ணுசாமி கூறியதாவது:பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டுமென, பெற்றோரிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி, 'ஆன்லைன்' ரேடியோ வாயிலாக, இன்னும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் குறித்த தகவல்கள் சேகரித்து, ஆசிரியர்கள் அவர்களை பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.



பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக தற்போது, 'ஆன்லைன்' வகுப்பு துவங்கப்பட்டு, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக பாடங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.பெற்றோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பள்ளியில், சமூக இடைவெளி பின்பற்றி, பாதுகாப்புடன் வகுப்புகள் நடக்கிறது. ஒரு மாணவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தாலும், பெற்றோருக்கு தெரிவித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். பள்ளியில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது. அதனால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X