மழைநீர் ஓடையில் 'மெகா' தூய்மை பணி:பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:45

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மழைநீர் ஓடைகள் மற்றும் கால்வாய்கள் துார்வாரும் மெகா துாய்மை முகாம் நேற்று துவங்கியது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் செல்லும் மழைநீர், மரப்பேட்டை பொட்டுமேடு, ஊத்துக்காடு ரோடு, கோட்டூர் ரோடு, நேரு நகர், கண்ணப்பநகர் வழியாக ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணாகுளம் செல்கிறது.தற்போது, தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், ஓடைகள் துார்வாரும் வகையில், 'மெகா துாய்மை முகாம்' நேற்று துவங்கப்பட்டது. மரப்பேட்டை ஓடையில், மண் அள்ளும் இயந்திரம் கொண்டு, துாய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.இப்பணியை, நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி ஆய்வு செய்தார். நகர் நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், ஜெயபார்வதி ஆகியோர், பணிகள் குறித்து விளக்கினர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பருவமழையையொட்டி, ஓடைகள், கால்வாய்கள் துார்வார, 'மெகா துாய்மை முகாம்' வரும், 25ம் தேதி வரை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மரப்பேட்டையில் இருந்து, கண்ணப்பன் நகர் வரை ஐந்து கி.மீ., ஓடை துார்வாரப்படுகிறது.முதல் நாளில், நாச்சிமுத்துவீதி, மரப்பேட்டை வீதி, இந்திரா நகர், ராமுகாலனி, கல்லுக்குழி இட்டேரி கால்வாய், பணிக்கம்பட்டி குளம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.மொத்தம், இரண்டு மண் அள்ளும் வாகனங்கள், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 60 துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வரும், 25ம் தேதி வரை அனைத்து ஓடை, கால்வாய்கள் துார்வாரப்பட்டு, துாய்மை பணி நடக்கிறது. இப்பணிகளை கண்காணிக்க நான்கு சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202123:23:11 IST Report Abuse
Ram Pollachi இதே ஓடையில் சாய நீரை திறந்து விடுகிறார்கள். அதை ஒரு பயலும் கண்டுகொள்வது - கண்டிப்பது இல்லை.
Rate this:
Cancel
21-செப்-202123:23:02 IST Report Abuse
Ram Pollachi இதே ஓடையில் சாய நீரை திறந்து விடுகிறார்கள். அதை ஒரு பயலும் கண்டுகொள்வது - கண்டிப்பது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X