நடைபாதை பணியில் வீணாகும் வரிப்பணம் கிரானைட் கற்களால் தடுமாறும் பாதசாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
02:39

சென்னை : சென்னையில், கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்படும் புதிய நடைபாதை பணிகளுக்காக, ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதையில் இருந்து, கருங்கற்கள், சிமென்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, அவை குப்பையில் வீசப்படுவதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



சென்னை மாநகராட்சி சார்பில், 387 கி.மீ., நீளம் கொண்ட, 471 பஸ் சாலைகள்; 5,525 கி.மீ., நீளம் கொண், 33 ஆயிரத்து 374 உட்புற சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.இது போக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல பஸ் சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. சாலையின் அகலத்தின் அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது.சென்னையில், சதுர வடிவ கருங்கற்கள் பதித்த நடைபாதைகள் இருந்தன. இவை, சிறுவர்கள், கர்பிணியர், மூத்த குடிமக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்தது.அதே போல், இளைய தலைமுறையினர், நவீன செருப்புகள் அணிந்து நடந்தாலும், சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்தது. தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' அறிவிப்புக்கு பின், பழைய நடைபாதை கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, பளபளப்பாக மின்னும் கிரானைட் கற்களால் நடைபாதை அமைக்கப்படுகிறது.



இதில், தண்ணீர், வழுக்கும் தன்மை கொண்ட பொருட்கள் கிடந்தால் அதை மிதிக்கும் பாதசாரிகள், நிலைதடுமாறுவது நிச்சயம். கைத்தடியுடன் நடக்கும் மூத்த குடிமக்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரானைட் நடைபாதைகளில் நடக்கவே அச்சப்படுகின்றனர். மழைக்காலங்களில் பெரும்பாலானோர், வழுவழுப்பான நடைபாதையில் நடக்க தயங்கி, அதற்கு பதில் சாலையில் நடக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், மழை நேரத்தில், நடைபாதையில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற கல்லுாரி மாணவியர், லாரி மோதி பலியாகினர். கிண்டியில் நடந்த இந்த சம்பவம், அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின், அனைவரும் அதை மறந்துவிட்டனர். காலுக்கு பிடிமானம் கொடுக்கும், கருங்கற்கள் எந்த காலத்திலும் அழிவதில்லை. அவற்றை அகற்றிவிட்டு, நவீனம் என்ற பெயரில், உயிருக்கு உலை வைக்கும்,



கிரானைட் கற்களை நடைபாதையில் பதிப்பதால், விபத்துடன், மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.நடைபாதைகளில் இருந்து அகற்றப்பட்ட கருங்கல் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளது. அது போல், மழை நீர் பூமிக்குள் செல்ல ஏதுவாக, சாலையோரம் சிமென்ட் கற்கள் பதித்த, சாலை மட்ட நடைபாதை அமைக்கப்பட்டது.அதிலும், நவீனமாக அமைக்கிறோம் என்ற பெயரில், தகர்த்து குப்பையில் போடப்படுகிறது. இதனால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.பழைய கருங்கல்லால் ஆன நடைபாதையில், எந்த பயமும் இல்லாமல் நடந்து சென்றோம். சறுக்கும் தன்மை கொண்ட நடைபாதை அமைத்துள்ளதால், அதில் நடக்கவே பயமாக உள்ளது.



இதனால், சாலையில் இறங்கி நடக்கிறோம். பிரதான சாலையில் உள்ள, பல நடைபாதைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் வகையில், தடுப்பு இல்லாமல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. எப்போதும், அழியாத கருங்கற்களை குப்பையில் வீசியது, பொதுமக்கள் வரிப்பணத்தையும் சேர்த்து வீசியதற்கு சமம்.- பாதசாரிகள்இது குறித்து, பெயர் கூற விரும்பாத, சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் கூறியதாவது: பழைய கருங்கற்கள், உளியால் செதுக்கியவை.



அதில் சொரசொரப்பு இருக்கும். எந்த காலத்திலும் பாதுகாப்பானவை. கிரானைட் கற்களில், நடப்பதற்கான கால் பிடிமானம் இருக்காது. அதில், சறுக்கும் தன்மை அதிகம். கிரானைட் ஊழலில், இதுவும் ஒன்று தான்.கிரானைட் கல் பதித்த நடைபாதை தேவையில்லாதது. எப்போதும் ஆபத்தானது. குப்பையில் வீசிய கருங்கற்களை, அரசு வளாக பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தி இருக்கலாம். இனியாவது, கிரானைட் கற்கள் பதிப்பதை அரசு தடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X