உதவி திட்ட அதிகாரி நியமனத்தில் குழப்பம் சி.எம்.டி.ஏ., பணி விதி குளறுபடி தீருமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
04:06


சென்னை நு: சி.எம்.டி.ஏ.,வில் பணி விதி குளறுபடி காரணமாக, 17 திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் தற்போதைய நிலவரப்படி, 17 உதவி திட்ட அதிகாரிகள், 72 திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.



இந்த பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்ப, கடந்த ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.ஆனால், பணி விதிகளில் காணப்படும் சில குளறுபடிகளால் இந்நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள், காலியிடங்களை நிரப்ப முன்வந்துள்ளனர். ஆனால், கல்வித்தகுதி தொடர்பாக பணி விதிகளில் குழப்பம் நிலவுவதால் நேரடி தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில், 2006க்கு பின் உதவி திட்ட அதிகாரி பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக மட்டுமே நிரப்பப்படுகின்றன. நேரடி தேர்வு நடத்த வேண்டுமானால், நகரமைப்பு பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் முடித்தவர்கள் வர வேண்டும் அல்லது பி.இ., பட்டத்துடன் ஐந்தாண்டு நகரமைப்பு பணி அனுபவம் உள்ளவர்கள் வரலாம்.இதில் நகரமைப்பு பட்டம், பட்டயம் பெறுவோர் குறைவு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பி.இ., படித்தவர்களின் பெயர்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. இவர்களின் நகரமைப்பு பணி அனுபவத்தை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்ள திட்ட உதவியாளர்களில் பலர் நகரமைப்பு பட்டம் பெறாதவர்கள் என்பதால், பதவி உயர்வு வழங்குவதற்கும் சிக்கல் ஏற்படுகிறது.இது தொடர்ந்தால், துணை திட்ட அதிகாரி இடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்படும்.இதனால், அடுத்த சில ஆண்டுகளில் சி.எம்.டி.ஏ., நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X