50 சதவீதம் சரிவு! புரட்டாசி பிறந்ததால் இறைச்சி விற்பனை... ஆடு, மாட்டிறைச்சி விலையில் மாற்றமில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
04:08

சென்னை : சென்னையில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி, இறைச்சி விற்பனை, 50 சதவீதம் சரிவடைந்துள்ளது.



மீன், நண்டு மற்றும் கோழி இறைச்சி விலை குறைந்தாலும், ஆடு, மாட்டிறைச்சியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான ஹிந்துக்கள், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது வழக்கம்.'இந்த மாதத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவதால், உடல் சூடு மேலும் அதிகரித்து, உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும்; செரிமான சக்தி குறைந்து, வயிற்று உபாதைகள் ஏற்படும். இதனால், உடம்பில் கொழுப்பு செரிக்கப்படாமல், ரத்தத்தில் அதிகரிக்கும்' என, கருதப்படுகிது.சித்த மருத்துவர்கள்இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம், சென்னையில் இறைச்சி விற்பனை, 50 சதவீதம் குறைந்தது.சென்னையில், நண்டு மற்றும் மீன் விலையும், விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆடு, மாடு இறைச்சி விற்பனை பாதியாக சரிந்தாலும், விலையில் மாற்றம் இல்லை.இது குறித்து, சென்னை மாநகராட்சியின், மாநகர கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் இறைச்சி கூடங்களில், வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில், 5,000ஆடுகள், 300 மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.தற்போது, புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், முதல் ஞாயிற்றுக்கிழமையின் போது, 2,402 ஆடுகள், 160 மாடுகள் மட்டுமே வெட்டப்பட்டன. அதன் படி, உணவுக்காக இறைச்சி வெட்டுவது, 50 சதவீதம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையாமல் இருக்க, புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது என, சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு திறன்இதுகுறித்து, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் கூறியதாவது:கார் காலமான புரட்டாசியில், மேகங்கள் சூழ்ந்து இருப்பதால், காற்று குளிர்ச்சி அடையும். கடந்த காலங்களில் வெப்பம் அடைந்த பூமியில், இந்த குளிர்ச்சியினால், ஆவி எழும்பி வெப்பத்தை மேலும் அதிகப்படுத்தும்.இந்த வெப்பம், உடலையும் பாதித்து, பசியை ஏற்படுத்தாமல் மந்தப்படுத்தும்.இதனால், உடலில் 'ஆமம்' என்னும் 'கபம்' அதிகரித்து கிருமிகள் பெருக வழிவகுக்கும். 'மந்தமலாது சுரம் வராது' என்ற சித்தர் கோட்பாட்டின் படி, சுரமே எல்லா நோய்களுக்கும் காரணமாகிறது.எனவே, பசியை அதிகரிக்கும் பொருட்டும், கிருமியின் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் பொருட்டும், புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என, சித்தர்கள் கூறியுள்ளனர். இது போன்ற சூழலில், நோய் எதிர்ப்பு திறன் குறைந்தால், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, பொதுமக்கள் அசைவம் சாப்பிடுவதை தள்ளி வைப்பது நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஆடுகள் இடம் வழக்கமாக வெட்டப்படுவது ஞாயிற்றுக்கிமை வெட்டியதுபுளியந்தோப்பு 3,500 1,800வில்லிவாக்கம் 900 350சைதாப்பேட்டை 600 252இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாடுகள்வழக்கமாக வெட்டப்படுவது ஞாயிற்றுக்கிழமை வெட்டியது300 160

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X