மணலி : சாயும் நிலையில் உள்ள, சாலை மின் விளக்கு கம்பங்களை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மணலி, வார்டு 16ல் உள்ள கன்னியம்மன் பேட்டையில் இருந்து, விச்சூர் செல்லும் கடப்பாக்கம்ஏரியின் கிழக்கு ஒட்டிய சாலையில் மின் விளக்கு கம்பங்கள் உள்ளன.இதில், சில மின் விளக்குகள், இரவு நேரத்தில் ஒளிர்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை அவ்வப்போது மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.இதில், ஓரிரு மின் விளக்கு கம்பங்கள், பின்பக்கமாக சாயும் அளவிற்கு உள்ளன. இதை கவனிக்கா விட்டால், விவசாய நிலங்களில் சாய வாய்ப்பு உள்ளது.எனவே, மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, சாயும் நிலையிலுள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.