பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பாழாகும் முன் ஏலம் விட கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
04:20

வியாசர்பாடி : பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், துருப்பிடித்து வீணாகி வருவதால், ஏலம் விட கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை வியாசர்பாடியில், பல்வேறு வழக்குகளில் காவல் நிலையங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.



அந்த வகையில் திருட்டு மற்றும் மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.மேலும் விபத்து மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களும் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.இவ்வாறு கைப்பற்றப்படும் இருசக்கர வாகனங்கள், வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில், திறந்தவெளியில் பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மட்கி வீணாகி வருகின்றன.பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் துருப்பிடித்து வீணாவதுடன், ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது.எனவே, துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விட, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X