திருநின்றவூர் : மது அருந்தியதை தட்டிக் கேட்ட நபர்களை கத்தியால் குத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாஸ்புரத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், 30, பிரபு, 31. இவர்கள், அதே பகுதியில் மது அருந்திய இருவரை தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் ஸ்ரீதர், பிரபு ஆகியோரை வெட்டினர். படுகாயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.புகாரை விசாரித்த திருநின்றவூர் போலீசார், கத்தியால் குத்திய திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த ஹரிஷ், 18, நெமிலிச்சேரியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், 21, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.