மது விற்பனை மூதாட்டி கைது | சென்னை செய்திகள் | Dinamalar
மது விற்பனை மூதாட்டி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
04:38

ஐஸ்ஹவுஸ் : மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார், 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம் இரவு, செல்லம்மாள் தோட்டம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுஇருந்தனர்.

அப்போது, மூதாட்டி ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த சாந்தி, 70, என்பது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர், பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X