கடலுார் : வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாவட்டத்தில் தி.மு.க.,கூட்டணி சார்பில் கட்சியினர் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலுாரில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தனது வீட்டு முன்பு, மனைவி லீமா அய்யப்பனுடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் தினகரன், முன்னாள் மாவட்ட பிரநிதிகள் ரவிச்சந்திரன், தமிழ்வாணன், சரவணன் மற்றும் வனிதா சேகர், இளங்கோவன், வரக்கால்பட்டு ஊராட்சி தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கடலுாரில் காங்., சார்பில், நகர தலைவர் வேலுசாமி தலைமையில் அவரது வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்கள் சங்கர், வேலு, மணி, நகர பொருளாளர் ராஜி சவுக்கார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கடலுார் மாவட்ட குவாரி சங்க தலைவரும், தி.மு.க., பிரமுகருமான கோவிந்தராஜ், மணக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். வழக்கறிஞர் ரவிசங்கர் மற்றும் சதீஷ்குமார், தி.மு.க., பிரமுகர்கள் சுரேஷ், சண்முகம், கிளை செயலாளர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நெய்வேலி: நெய்வேலியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தொ.மு.ச., பேரவை இணைச் செயலாளர் சுகுமார், நெய்வேலி நகர தி.மு.க., பொறுப்பாளர் பக்கிரிசாமி, காங்.,நிர்வாகிகள் குள்ளப்பிள்ளை, ஸ்டிபன், த.வா.க.,ஞானப்பிரகாசம், ம.தி.மு.க., பிச்சை, மனோகரன், வி.சி., மருதமுத்து, அதியமான், பாட்ஷா பன்னிர், குழந்தைவேல் உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., நகர செயலர் தண்டபாணி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, இளைஞரணி பொன்கணேஷ், த.வா.க., நகர செயலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறியாளர் அணி செம்பியன் தலைமை தாங்கினார். பண்ருட்டி: பண்ருட்டியில் த.வா.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து வேல்முருகன் எம்.எல்.ஏ.,தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுரேந்தர், மாவட்ட செயலர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். வேப்பூர்: வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலர் மாரிமுத்தாள் குணா, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கண்ணு, கிளை செயலர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியம் அடரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மங்களூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடேசன், நாராயணசாமி, ராமதாஸ் உட்பட பல் பஙகேற்றனர். மங்களூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், சேகர், சின்னதுரை, ஊராட்சி தலைவர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க. ஆனந்தன் தலைமை தாங்கினார். தி.மு.க .,நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் செல்வகுமார், நகர தலைவர் சுப்ரமணியன், பார்த்திபன், வி.சி., ஒன்றிய செயலாளர் ரவி, நகர செயலாளர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தி.மு.க., நகர செயலாளர் பழனி மனோகரன் வீட்டின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, வழக்கறிஞர் மனோகரன், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.