உள்ளாட்சி தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்களை விட பெண்கள் அதிகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:07

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம்நேற்று வெளியிட்டது. இதில், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண்கள் உட்பட,மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.



புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல், 38 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.இதுகுறித்து மாகியை சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தொகுதி மறு சீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு பணிகளை முடித்து, 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கினர்.அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த ஜூன் 21ல் வெளியிடப்பட்டது.இறுதி வாக்காளர் பட்டியல்அது தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆராய்ந்து, கள ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து, நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.பெண்களே அதிகம்இதில், மாநிலத்தில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண் வாக்காளர்கள் உள்ளனர். தவிர, 117 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தம், 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 58 ஆயிரத்து 734 பேர் அதிகம் உள்ளனர்.மண்டலம் வாரியான விபரம்இரு நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ள புதுச்சேரி மண்டலத்தில், 7 லட்சத்து 72 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர்.ஒரு நகராட்சி, 5 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ள காரைக்கால் மண்டலத்தில்



ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு நகராட்சி கொண்ட ஏனாமில் 37 ஆயிரத்து 817 வாக்காளர்கள், மாகியில் 31 ஆயிரத்து 139 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.வாக்காளர் குறைவுவார்டு வாரியாக தயாரிக்கப்பட்ட இந்த வாக்காளர் பட்டியல், வாக்காளர் இறப்பு, இடமாற்றம், பிற மாநிலங்களுக்கு குடியேறுதல், இருமுறை பதிவு ஆகியவற்றை நீக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற வாக்காளர்களை விட தற்போதைய பட்டியலில் 940 வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.இணையதளத்தில் வெளியீடுஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://sec.py.gov.in/ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேற்கண்ட இணையதளத்தில் சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம். தங்களின் வார்டு மற்றும் ஓட்டுச்சாவடி விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இத்தகவலை, மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் தெரிவித்துள்ளார்.தேர்தல் தேதி விரைவில்உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு, வரும் அக்., 4ம் தேதியுடன் முடிவடைகிறது.



இதனால், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.அதில், தொகுதி மறு சீரமைப்பு, இட ஒதுக்கீடு, ஓட்டுச்சாவடி அமைத்தல், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு, செலவின பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பணிகளையும் செய்து முடித்துள்ளது. இறுதிக் கட்டமாக, நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால், இவ்வார இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X