விவசாயி வெட்டிக் கொலை தவளக்குப்பம் அருகே பதற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:21

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை, மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.



புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த டி.என். பாளையம் உடையார் வீதியை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன், 51; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், டி.என்.பாளையம், இருளர் குடியிருப்பு பகுதி அருகே உள்ளது.அனந்தராமன் நேற்று மாலை 3:30 மணியளவில் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு மோட்டார் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள், அவர்கள் வைத்திருந்த கத்தியால் அனந்தராமன் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பிச் சென்றனர். அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அனந்தராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, அனந்தராமன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்



.கொலை செய்யப்பட்ட அனந்தராமனுக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.கொலை தொடர்பாக தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் நேரில் சென்று விசாரணை செய்தார். அனந்தராமனுக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. அதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனந்தராமனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.அப்பகுதியில் மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X