சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:23

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலுார் டி.கே.மண்டபம், பைபாஸ் சாலையில் உளுந்துார்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணிராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நெடுங்கம்பட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் ஸ்டாலின், 32; சில்வர் டிபன் பாக்ஸ், தட்டு, கூஜா உள்ளிட்ட 33 வகையான 336 வீட்டு உபயோக பொருட்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 970 ரூபாய் மதிப்பிலான பாத்திரங்களை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணசாமியிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X