கச்சிராயபாளையம் : கல்வராயன்மலை ஊராட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் 91 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இதன் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, பி.டி.ஓ., ஜெயராமன் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ.,க்கள் ரங்கசாமி, ஆரோக்கியசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.முகாமில் பங்கேற்ற 12 மண்டல அலுவலர்களுக்கு ஓட்டுப்பெட்டிகளை கையாளும் விதம், ஓட்டுப்பதிவிற்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்தும், ஓட்டுப்பெட்டிகளை சீல் வைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. துணை பி.டி.ஓ., அழகுராஜா பயிற்சி அளித்தார்.கல்வராயன்மலை ஒன்றியத்தின் மூலம் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வரும் 24ம் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடைபெற உள்ளது. துணை பி.டி.ஓ., முருகன் நன்றி கூறினார்.