பெண்ணிடம் ரூ.4.50 லட்சம் மீட்டு தரக்கோரி குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண்ணிடம் ரூ.4.50 லட்சம் மீட்டு தரக்கோரி குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:40

விருத்தாசலம் : வேலை வாங்கி தருவதாக ரூ. 4.50 லட்சம் மோசடி செய்த பெண்ணை கைது செய்து, பணத்தை மீட்டுதரக் கோரி, குழந்தைகளுடன் தாய் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 32; இவரது மனைவி மலர்க்கொடி, 31; இவர்களது மகன் ரவிவர்மா, 6; மகள் ரதிவதனி, 2;. ரமேஷ் உறவினர் மூலம், விருத்தாசலம் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிடம் அறிமுகமானார். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். கலெக்டர் கார் டிரைவர் பணியிடம் காலியாக உள்ளது. பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன் என கூறி, 2019ம் ஆண்டு ரூ. 4.50 லட்சத்தை லட்சுமி பெற்றுள்ளார்.சில வாரங்களுக்கு பிறகு, போலியான வேலை உறுதி கடிதம் தயார் செய்து, ரமேஷிடம் கொடுத்தார். அந்த கடிதத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்த போது, போலி கடிதம் என தெரிந்தது.ஏமாற்றமடைந்த ரமேஷ், லட்சுமியிடம் பணத்தை திரும்பிக் கேட்டார். இரண்டரை ஆண்டுகளாக பணம் தராமல் லட்சுமி ஏமாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் லட்சுமியிடம் ரமேஷ் மனைவி மலர்கொடி பணத்தை கேட்டார். அப்போது, பணம் தர மறுத்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மலர்கொடி குழந்தைகளுடன் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லாததால், நேற்று பகல் 1:00 மணியளவில் சப் கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை குழந்தைகள் மீது ஊற்றி தானும் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.சப் இன்ஸ்பெக்டர் ஆதி பேச்சு நடத்தி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார். குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பணம் மோசடி செய்த லட்சுமி சில மாதங்களுக்கு முன் மற்றொரு மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோப்பு சேதமாகும்தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் பேசிய சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், 'இங்கு தீக்குளித்தால் அருகில் உள்ள வாகனங்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் பாதிக்கப்படும்' என அவரிடம் கடிந்து கொண்டார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X