தி.மு.க., - காங்., பேச்சுவார்த்தை இழுபறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:48

செஞ்சி : விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., கட்சிக்கு 3 ஒன்றிய கவுன்சிலர் பதவி மட்டும் தரப்படும் என தி.மு.க., தரப்பில்தெரிவிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.



தி.மு.க.,வில் பிரிக்கப்பட்ட விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி 24, வல்லம் 21, மேல்மலையனுார் 24, மயிலம் 21, ஒலக்கூர்16, மரக்காணம் 26 என மொத்தம் 132 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. ஒன்றியத்திற்கு தலா 2 மாவட்ட கவுன்சிலர்கள்வீதம் மொத்தம் 12 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன.இந்த இடங்களில் போட்டியிட காங்., சார்பில் விருப்ப பட்டியலை அமைச்சர் மஸ்தானை சந்தித்து காங்., மாநில துணைத் தலைவர்கள்முன்னாள் எம்.எல்.ஏ., முருகானந்தம், மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள்கொடுத்தனர்.இதில் மயிலம் ஒன்றியத்தில் 4, வல்லம் ஒன்றியத்தில் 2, மேல்மலையனுார் ஒன்றியத்தில் 2, ஒலக்கூர் ஒன்றியத்தில் 4,செஞ்சி ஒன்றியத்தில் 5 என மொத்தம் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவியும், 4 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் பட்டியல் கொடுத்தனர். இதன் பிறகு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.முதல் கட்டபேச்சுவார்த்தை குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., முருகானந்தம் கூறுகையில், 'தி.மு.க., தரப்பில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகியசட்டசபை தொகுதிகளில் தலா 1 ஒன்றிய கவுன்சிலர் வீதம் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவி மட்டும் தருவதாக கூறியுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் பேச்சு நடத்த உள்ளோம்' என்றார். அதனைத் தொடர்ந்து நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை.தேசிய கட்சியான காங்., கட்சிக்கு ஒரு ஒன்றியத்தில் தலா ஒரு இடத்தில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு தராமல் தி.மு.க.,நிராகரித்திருப்பது காங்., கட்சியினரிடம் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X