அவலுார்பேட்டை : மேல்மலையனுார், மேல்வைலாமூர் அடுத்த அடுக்குபாசி கிராமத்தில் பொதுமக்கள் சார்பில், 5000 பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கி பனை மர விதைகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் தஸ்தகீர், வி.ஏ.ஓ.,க்கள் யுவராஜ், ஊராட்சி செயலாளர்கள் சரவணன், திருமலை, சமூக ஆர்வலர் ஏழுமலை மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.