விழுப்புரம் : பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த அரும்புலியைச் சேர்ந்தவர் கருணாகரன், 35; இவரது வீட்டுமனையை பட்டா மாற்றம் செய்ய, விக்கிரவாண்டி தாலுகா அலுவலக சர்வேயரான, விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மனைவி ஸ்ரீதேவி, 48; என்பவர் 18ம் தேதி 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார்.அப்போது, ஸ்ரீதேவி, கணவர் வெற்றிவேல் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், துறைரீதியிலான நடவடிக்கையாக, ஸ்ரீதேவியை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட நில அளவைத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.