மாஜி., முதல்வர் கூறுவது பொய் | கடலூர் செய்திகள் | Dinamalar
மாஜி., முதல்வர் கூறுவது பொய்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
06:18

கடலுார் : முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியது போல் கடலுார் மாவட்டத்தில் எந்தவொரு நெல் கொள்முதல் நிலையமும் மூடப்படவில்லை என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.



அவர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு செயல்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த ஆண்டு இந்த சமயத்தில் 68 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் இயங்கியது. அதனால் நெல் கொள்முதல் நிலையம் குறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி பொய் கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவருக்கு அறிக்கை விடுவதற்கு செய்திகள் எதுவும் கிடைக்காததால் இது போன்று பொய்யான தகவலை கூறுகிறார். சிந்தித்து அறிக்கை விட வேண்டும்'இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X