சாலையோர வியாபாரிகளுக்கு நவீன தள்ளுவண்டிகள்  
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
06:36

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதி பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் 100 நபர்களுக்கு புதிய தள்ளுவண்டிகளை கலெக்டர் அனீஷ்சேகர், கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலையில் அமைச்சர் தியாகராஜன், எம்.பி., சு.வெங்கடேசன் வழங்கினர்.



பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார இயக்கம், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நவீன 4 சக்கர தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.மாநகராட்சி பகுதிகளில் விற்பனை மண்டலம், விற்பனை அல்லாத மண்டலம் என பிரித்து இவர்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வங்கி கடன் உதவி, ரூ.1000 வீதம் இரண்டுகட்டங்களாக கொரோனா நிவாரணம்,12,604 சாலையோர வியாபாரிகளில் 8649 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.



சாலையோர வியாபாரிகளுக்கு 'ஸ்மால் வெண்டிங் மொபைல் கார்டு' அமைக்க ரூ.6.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி பதிவு செய்த வியாபாரிகளுக்கு இரு வகையில் நவீன 4 சக்கர தள்ளுவண்டி வழங்கப்படும்.பொருட்கள் வைக்குமிடம், மேற்கூரை என சேதமடையாத அலுமினிய தகடால் வடிவமைக்கப்பட்டுள்ளது.



ஒரு சிறிய வண்டி மதிப்பு ரூ.45,000, பெரிய வண்டி மதிப்பு ரூ.95,000 ஆகும்.தயார்செய்யப்பட்ட 1243 வண்டிகளில் முதற்கட்டமாக ஆதரவற்ற விதவைகள், மாற்றுதிறனாளி, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நகர்நல அலுவலர் ராஜா, உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X