இறங்கி ஏறி பயமுறுத்தும் கொரோனா | மதுரை செய்திகள் | Dinamalar
இறங்கி ஏறி பயமுறுத்தும் கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
06:42

மதுரை : மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று திடீர் குறைவும் அதிகரிப்புமாக பயமுறுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 27 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.



செப்.,14ல் 26 பேர், 15ல் 22பேர், 16ல் 17 பேர், 17ல் 20பேர், 18ல் 15 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர். நேற்று முன்தினம் 14 பேர் பாதித்த நிலையில் நேற்று புதிய பாதிப்பு இரு மடங்காகி 27 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 14 பேர் குணமடைந்தனர். 199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



மதுரையில் தொடர் அரசு, தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஆங்காங்கே மக்கள் கட்டுப்பாடின்றி கூட்டமாக குவிகின்றனர். சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது. பெயருக்கு 'வாய்த்தாடையில்' மாஸ்க் அணிந்த படி நிகழ்ச்சிகளில் பலர் பங்கேற்கின்றனர். அதனால் தொற்றும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சமூக இடைவெளியை பின்பற்றினால் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X