செயல்படாத கூட்டுறவு கட்டட நாணயச்சங்கம் திவாலா...? | மதுரை செய்திகள் | Dinamalar
செயல்படாத கூட்டுறவு கட்டட நாணயச்சங்கம் திவாலா...?
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
06:47

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் கூட்டுறவு கட்டட நாணயச்சங்கம் ஓராண்டாக முடங்கி உள்ளதால், உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.


மதுரை எல்லீஸ்நகரில் பல ஆண்டுகளாக செயல்படும் இச்சங்கத்தில் மதுரை, விருதுநகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சம்பளத்தில் மாதம் குறைந்தது ரூ.200 முதல் பிடித்தம் செய்து தொழிலாளர்களுக்கு வீட்டு கடன், நகைக் கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதில் கிடைக்கும் வட்டி மூலம் சங்கம் செயல்பட்டது. ஆனால் ஓராண்டாக சங்க அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொழிலாளர் பணம் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை. உறுப்பினர்கள் கடன் பெற முடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.



பாதிக்கப்பட்ட சோழவந்தான் கிளை அலுவலகஉறுப்பினர் தங்கமணி கூறுகையில் “என் பணம் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. தேவை இருந்தும் கடன் பெறமுடியவில்லை. தொழிலாளர் பணம் என்ன ஆனது என தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளாக 'டிவிடெண்டும்' வழங்கவில்லை” என்றார்.



சங்கத் தலைவர் ஜெயராஜ் கூறியதாவது: 2019ல் தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதற்கு முன்பே தொழிலாளருக்கு சங்கம் வழங்க வேண்டிய தொகை ரூ.1.60 கோடியாக இருந்தது. ஆனால் மாதம் 1.50 லட்சம் ரூபாய் வரையே சம்பளப் பிடித்தம் செய்ய முடிந்தது. சிலர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டாம் என எழுதிக்கொடுத்தனர். இதனால் அலுவலக ஊழியர்கள் 6 பேருக்கு சம்பளம் கொடுக்க முடியாததால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.



தற்போது வரைரூ.32 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து ரூ.1.60 கோடியை எவ்வாறு திருப்பி வழங்குவது. துணைப் பதிவாளர் உதவியுடன் நலிவடைந்த சங்கத்தை மேம்படுத்த அரசிடம் ரூ.2 கோடி நிதி கேட்டு சங்கத்துக்கு புத்துயிர் அளிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தேனியில் சங்கத்துக்கு சொந்தமான பிளாட்டுகள்உள்ளன. அதை விற்க துணைப் பதிவாளர் ஒப்புதல் அளித்தால் உறுப்பினர்களுக்கு பணத்தை ஓரளவு திருப்பி வழங்க முடியும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X