பள்ளி அருகில் ஒயின்ஷாப்; குடிமகன்கள் கும்மாளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:08

விருதுநகர் : விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் இருந்து ராஜாஜி நகர் செல்லும் வழியில் உள்ள சாரதா சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் ஒயின்ஷாப் உள்ளதால்,குடிமகன்களால் மாணவர்கள், குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.



இப்பள்ளி பகுதி நகராட்சியின் எல்லையில் இருப்பதால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருப்பதில்லை. இதனால் இத்தெருக்களில் பகல் நேரங்களிலே குடிமகன்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் மாணவர்கள் வந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் போதிய தெருவிளக்கு இல்லாததால் குடிமகன்கள் ராஜாங்கம் அதிகமாகிறது.



இரவு நேரங்களில் பள்ளியின் வாசல், சுற்றுசந்துக்களை பார் போல் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். பள்ளி அருகே பிள்ளையார் கோயில் உள்ளதால் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். பள்ளி அருகில் டாஸ்மாக் இருந்தால் அகற்றப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்ததை, மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தகராறு செய்யும் குடிமகன்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் ஒதுக்கு புறமாக இருப்பதால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்தை உருவாக்குகின்றனர். பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது வளாக சுவர்களை யொட்டி தகராறு செய்து சத்தமாக பேசுகின்றனர். இதனால் மாணவர்களின் படிக்கும் ஆர்வம் தடைபடுகிறது.ஜே.நெப்போலியன், குடியிருப்போர், ராஜாஜி நகர்.தடுத்த நிறுத்த வேண்டும்.இப்பகுதியில் டாஸ்மாக் அமைப்பதற்கு முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. வளரும் மாணவர்களை நல் வழிப்படுத்த ஆசிரியர்கள் உறுதியாக இருக்கும் நிலையில், இது போன்ற புற சமுக செயல்கள் பள்ளிக்கு அருகிலே நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.ஆர்.சொர்ணேஸ்வரன், தொழிலதிபர், ராஜாஜி நகர்.நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் கடை குறித்து மாவட்ட மேலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெ.மேகநாதரெட்டி, கலெக்டர், விருதுநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X