400 ஆண்டு முந்தைய சதிக்கல் கண்டெடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:11

திருச்சுழி : திருச்சுழி அருகே புரசலுாரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.



அந்த ஊரை சேர்ந்த தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தகவல் அறிந்து கள ஆய்வு செய்தபின் ராஜகுரு கூறியதாவது:இந்த சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில இருந்துள்ளது.



போரிலோ, வேறு காரணங்களிலோ கணவன் இறந்த பின் அவனுடனோ, தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவு சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இவற்றை மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். இந்த சதிக்கல் 2 அரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. ஆண் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.



ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர். தலையில் கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து உள்ளனர். சிற்பத்தின் மேல்பகுதி கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோயிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது.



சிற்பத்தின் கீழ்பகுதியில் காலை தொங்க விட்டு அமர்ந்த நிலையில் ஊஞ்சலாடும் பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதே ஊரில் ஏற்கனவே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது, என்றார்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X