அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்புகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:13

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் முறையாக செயல்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .



நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் வகையில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தனியார் வீடுகள் ,வணிக வளாகங்கள் ,கடைகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டது.



இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன் மழை நீரை தொட்டிகளில் சேகரித்து வைத்து பயன்படுத்தும் எண்ணமும் மக்களிடம் உருவானது. இதனால் கோடை காலத்தில் கூட மக்கள் தண்ணீருக்காக அலையாமல் குடிநீரை சேகரித்து தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.



நாளடைவில் திட்டம் குறித்து கண்காணிப்பு இல்லாமல் கிடப்பில் போனது.பொது மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அலுவலகங்களில் கூட மழைநீர் கட்டமைப்பு பராமரிப்பின்றி முடங்கி கிடக்கிறது. குழாய்கள் உடைந்தும் தண்ணீர் உறிஞ்சு குழிகள் மண் மேவியும் காணப்படுகிறது. இவற்றை சீரமைத்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அமைத்து தர வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும். அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து அறிக்கை தர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்...............



மழை நீர் சேகரிப்பு அவசியம்



வீடுகள், லாட்ஜ்கள், வணிக வளாகங்களில் கண்டிப்பாக மழைநீர் சேகரிப்பு வசதி செய்வது கட்டாயம் ஆக்க வேண்டும். தற்போது தனியார்கள் பல அடி ஆழத்தில் போர்வெல் அமைக்கின்றனர். இது போன்று போர்வெல் போடுபவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி உறிஞ்சு குழிகள் அமைப்பது கட்டாயம் என்று அரசு அறிவிக்க வேண்டும் .இதன் பின்னரே போர்வெல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் முடியும். இதற்கு முன் உதாரணமாக அரசு அலுவலகங்களில் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்ராமலிங்கம், சமூக ஆர்வலர், சாத்துார்...........................

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X