நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் வாகனங்கள்; அவசியமான சந்திப்புகளில் மேம்பாலம் இன்றி விபத்துக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:14

சாத்துார் : சாத்துார் - நான்கு வழிச்சாலை சந்திப்பு உட்பட முக்கிய சந்திப்புகளில் மேம் பாலம் இல்லாமல்,அடிக்கடி வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.



சாத்துார் - படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பானது நகரின் நடுவில் அமைந்துள்ளது. இப்பகுதி போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். காலை முதல் இரவு வரை வாகனங்கள் அதிக அளவில் இப்பகுதியை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நான்கு வழிச் சாலையில் வரும் கார்கள் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் நிலையில், இப்பகுதிசாலையை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி குறுக்கிடுகின்றன. அப்போது நான்குவழிச்சாலையில் வரும் வாகனங்கள் விபத்துக்களை சந்திக்கின்றன. இதை தடுப்பதற்காக போலீசார் நான்குவழிச்சாலையில் பேரிகார்டு அமைத்து உள்ளனர்.



கன்டெய்னர் லாரிகள் வரும்போது பேரிகார்டுகளால் நான்கு வழிச்சாலையில் டிராபிக் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இவ்வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தளவாட சாமான்கள் கொண்டு செல்லப்படும் நேரங்களில் இங்கு வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்த போக்குவரத்து போலீசார் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.



இருந்தபோதும் விபத்துகள் தொடர்கதையாகவே உள்ளது. பேரிகார்டுகள் மீதும் அவ்வபோது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.இதோடு இச்சந்திப்பு நான்குவழிச்சாலையில்தான் அரசு போக்குவரத்து, தனியார் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நடக்கின்றன. இதை கவனிக்க வேண்டிய போலீசார் கண்ட இடங்களில் நின்று ஹெல்மெட், முக கவசம் சோதனை மேற்கொள்ள, நெரிசலில் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர ஓட்டிகள், கரைக வாகன ஓட்டுநர்களும் திணறுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X